தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு

Covid Increase Case Tamilnadu
By Thahir Dec 31, 2021 05:23 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு  மீண்டும் எகிறத்தொடங்கியுள்ளது.

அந்த வகையில், தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,155- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,48,045- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 603- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பைக் கண்டறிய 1,04,615- மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  6,929- ஆக அதிகரித்துள்ளது.