இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 53 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது . அந்த வகையில் இன்றைய தொற்று நிலவரப்படி சுமார் 19,893 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 4,40,87,037 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவலின் படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,36,478 ஆக குறைந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 5,26,530 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.31 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோரின் விகிதம் 98.05 ஆக பதிவாகியுள்ளது.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan