மக்களே உஷார்..! தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு - அமைச்சர் எச்சரிக்கை
கொரோனா பெருந்தொற்று பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியா மற்றும் பல்வேறு பகுதிகளில் இன்புளூயன்சா மற்றும் கொரோனா வைரஸ்காய்ச்சல் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில், இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 500 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதனால் மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்புளூயன்சா காய்ச்சலும் அதிகமாக பரவி வருவதால், நேற்று 1000 இடங்களில் முகாம் நடத்த திட்டமிட்டு 1586 காய்ச்சல் நாடு முழுவதும் நடைபெற்றது.
திருச்சி இளைஞர் உயிரிழப்பு
நேற்று மட்டும் தமிழகத்தில் 2,263 இன்புளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, தங்களை தனிபைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியில் இளைஞர் 27 வயதுடைய நபர் உயிரிழப்பு தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உயிரிழந்த இளைஞரின் மாதிரிகள சேகரிப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அந்த முடிவுகள் வந்த பிறகு தான் காய்ச்சலுடன் சேர்த்து எந்தெந்த இணை நோய்கள் அவருக்கு இருந்தது என கண்டறிய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.