கொரோனா அச்சத்தில் மூத்த தம்பதியர் தற்கொலை! - சிவகாசி அருகே சோகம்!
சிவகாசி அருகே கொரோனா அச்சத்தால் மூத்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பயத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. சிவகாசி ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த தெய்வானை சர்க்கரை நோயினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
தன் கணவர் பெருமாளிடம், அடிக்கடி இப்படி நோயுடன் வாழ்வதை காட்டிலும் செத்துவிடலாம் என்று புலம்பி வந்துள்ளார். இவர்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வரும் நிலையில் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், பெருமாள், தெய்வானை ஆகிய இருவருமே உடல்நலமின்றி சிரமப்பட்டுள்ளனர். ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தால் அவர்களது மகன், மகள்களை வர சொல்லியிருக்கின்றனர்.
சிவாகாசி வந்த அவர்களது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஒன்றும் ஆகாது என தெரிவித்து, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கணவன் பெருமாள் மற்றும் மனைவி முத்துமணி ஆகிய இருவரும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதனை கண்ட அவரது மகள் மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.