இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது

covid india count percentage centre updates
By Swetha Subash Feb 13, 2022 06:01 AM GMT
Report

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 58,077 பேர், நேற்று 50,407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை 50ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

தொற்று ஒருபுறம் குறைந்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.17% ஆக உள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,37,045 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.