தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்

Tn government Covid cases
By Petchi Avudaiappan Jun 15, 2021 02:06 PM GMT
Report

 தமிழகத்தில் மேலும் 12,000-க்கும் குறைவானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,78,298 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 23,78,298 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 23,207 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 22,23,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 267 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 30,068 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோயம்புத்தூரில் அதிகபட்சமாக 1563 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.