தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Covid active cases
By Petchi Avudaiappan Jun 13, 2021 01:56 PM GMT
Report

தமிழகத்தில் மேலும் 14,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,53,721 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 25,895 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 21,62,073 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.