தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் - கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரே நாளில் 1,54,324 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 28,68,500 பேராக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா பாதித்து தற்போது 1,03,610 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 6,235 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,930 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 8,218 பேருக்கும், செங்கல்பட்டில் 2,030 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,162 பேருக்கும், திருவள்ளூரில் 901 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.