கொரோனா 3வது குழந்தைகளை மட்டும் பாதிக்காது: அதிர்ச்சி தகவல்
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல என்றும், அது அனைத்து வயதினருக்கும் பாதிக்கும் என கூறினார்.
முதல் மற்றும் இரண்டாம் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதுவரை குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்பதனால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கக்கூடும் என aமருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என்றும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் குறைந்தது ஆக்சிஜன் வசதிகளுடன் 100 படுக்கைகள் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அப்போது அவர் குறிப்பிட்டார்.