கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை - என்.கே.அரோரா..!

covid 3rdwave attack babies
By Anupriyamkumaresan May 25, 2021 01:23 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் முதல் அலையில் முதியோரும், தற்போதைய இரண்டாவது அலையில் நடுத்தர வயதுப்பிரிவினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்துவரும் 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதே மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது ஆதராமற்றது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா, கொரோனாவிற்கான மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்கள் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.

கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை - என்.கே.அரோரா..! | Covid 3Rdwave Babies Attck Arora Statement