என்னப்பா இது சோதனைமேல் சோதனை : புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா

cricket corona srivsindia
By Irumporai Jul 30, 2021 09:51 AM GMT
Report

இந்திய இளம் வீரர்களைக் கொண்ட ஜூனியர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த அணியை மூத்த வீரர் ஷிகார் தவான் கேப்டன் பொறுப்பேற்றிருக்கிறார். ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி, டி20 தொடரில் பங்கேற்றது. நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, டி-20 தொடரை இந்திய அணி இழந்தது.

இந்த நிலையில் இந்திய வீரர் குருணால் பாண்ட்யாவுக்கு கடந்த 27 ஆம் தேதி, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர் ஆகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால், எஞ்சியிருந்த 11 வீரர்கள் 2வது டி-20 போட்டியிலும் நேற்றைய போட்டியிலும் பங்கேற்றனர்.

இந்நிலையில், குருணால் பாண்ட்யாவை அடுத்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு இந்திய வீரர் கவுதமுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்திய அணி டி20 தொடரையும் இழக்க, மேற்கொண்டு இரண்டு வீரர்களுக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக 3 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணி மேலும் சில நாட்களுக்கு இலங்கையில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பயிற்ச்சியாளர் டிராவிட் தொடங்கி, வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் மேலும் சில நாட்கள் கூடுதலாக இலங்கையில் தனிமைபப்டுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் மீண்டும் எப்போது இந்தியா திரும்புவார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை