டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா : அதிர்ச்சியில் வீரர்கள்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு ஜூலை 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த நபர் கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதேசமயம் கொரோனா காரணமாக ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.