இனி அமெரிக்காவில் ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை மிரட்டிய கொரோனா
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இந்த நிலையில் அமெரிக்காவில் 12 வயதை கடந்த அனைவருக்கும் ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : நாங்கள் 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு புதிய தடுப்பூசியை தொடங்குகிறோம். இது புதிய அணுகுமுறை ஆகும்.
ஆண்டுக்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு டோஸ் போடப்படும். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறி வருவதால், ஆதிக்கம் செலுத்துகிற உருமாறும் வைரஸ்களை இலக்காக கொண்டு, நமது தடுப்பூசிகளை புதுப்பிக்க முடியும்.
வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே இந்த தடுப்பூசியை தொழிலாளர் தினத்துக்கும், ஹாலோவீனுக்கும் (இது அக்டோபர் மாதம் வரும்) இடையே நீங்கள் அதைப் போட்டுக்கொள்ள வேண்டும்.
இது பாதுகாப்பானது,இதைப் பெறுவது எளிது. இது இலவசம் என தெரிவித்துள்ளார். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கி உள்ளன