கோவேக்சின் டெல்டா வைரசை விரட்டுகிறது..அமெரிக்க நிறுவனம் கண்டுபிடிப்பு!
இந்தியாவில் தற்போது கொரோனா நோய்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசி நல்ல பலனை கொடுப்பதாக அமெரிக்க சுகாதார நிறுவனங்களில் ஒன்றான NIHA தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியைஅவசர கால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் பெற்று பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசி தற்போது உலக நாடுகளையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் கோவேக்சின் தடுப்பூசி டெல்டா வைரஸ் மற்றும் ஆல்பா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (NIHA) தெரிவித்துள்ளது.
NIHA ஆய்வு முடிவுகளின் படி:
அமெரிக்க சுகாதார நிறுவனமான niha கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களிடம் பரிசோதனை நடத்தியது.
அதன் முடிவுகளின் படி ஆல்பா மற்றும் டெல்டா வகை வைரசிற்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இது நோய்க்கு எதிராக 78 சதவீத செயல்திறனையும், மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு உள்ளிட்ட கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 100 சதவீத செயல்திறனையும் கொண்டுள்ளதாக கூறுகிறது.