நாளை முதல் இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி : பிரதமர் மோடி அறிவிப்பு

COVID-19 Narendra Modi
By Irumporai Apr 27, 2022 08:46 AM GMT
Report

 நாளை முதல் 6 முதல 12 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தபட்டு வரும் நிலையில் , 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே , கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு DCGI (Drugs Controller General of India) நேற்று ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.