ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்த 82 ஆயிரம் கோவாக்ஷின் தடுப்பூசிகள்....
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மேலும் 82 ஆயிரம் டோஸ் கோவாக்ஷின் தடுப்பூசிகள் விமானத்தில் இன்று வந்தடைந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள்,தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.b ஆனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை போக்கும் வகையில் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 16 பாா்சல்களில் 426 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தது. அதில் 82 ஆயிரம் டோஸ் கோவாக்ஷின் தடுப்பூசிகள் இருந்ததாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.