கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

India Vaccine WHO Covaxin Approved
By Thahir Nov 03, 2021 12:40 PM GMT
Report

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி, அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோ டெக் நிறுவனம் கூறியுள்ளது.

கோவாக்சின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் முற்றிலும் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' தடுப்பூசி ஆகும்.

இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை அறிக்கையாக சமர்பிக்க உலக சுகாதார கூறியது. இதையடுத்து அறிக்கையை சமர்பிக்க பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இறுதி முடிவை எடுக்க தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கடந்த புதன்கிழமை கூடியது, மேலும் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்காக கோவாக்சின் பரிந்துரைக்கப்பட்டது.

கோவாக்சின் அறிகுறி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனையும், புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 65.2 சதவீத பாதுகாப்பையும் நிரூபித்துள்ளது.

கோவாக்சின் 3ஆம் கட்ட பரிசோதனையில் இறுதி ஆய்வை முடித்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.