தடுப்பூசி சோதனைக்குத் தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!
2 வயது முதல் 18 வயது வரை குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனையை தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசி தற்போது 18 வயது மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனையை மேற்கொள்ள நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, மத்திய அரசும் தடுப்பூசி சோதனைக்கு அனுமதியளித்திருந்த நிலையில், சில எதிர்ப்பாளர்கள் சோதனைக்கு தடை விதிக்க கோரி மனு அளித்திருந்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர்நீதிமன்றம், தடுப்பூசி சோதனையைத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
