கூடுதலாக 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன..!
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் கூடுதலாக 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கு தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுவதால், கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று காலை ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 10 சிறிய பார்சல்களில் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டது.