கோவாக்சினை விட கோவிஷீல்டு தான் நன்றாக செயல்படுகிறது - ஆய்வில் தகவல்!
இந்தியாவில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தான் நன்றாக செயல்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. கொரோனாவைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், ஆரம்பத்திலிருந்து இப்போது வரை கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியே அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் கோவாக்சினை விட கோவிஷீல்டு கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவது தெரியவந்திருக்கிறது.

பெரும்பாலும் முன்களப் பணியாளர்களுக்கே இரண்டு டோஸ்கள் போடப்பட்டிருந்ததால், அவர்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். 13 மாநிலங்களைச் சேர்ந்த 515 சுகாதாரப் பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் 425 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது. இவர்களில் 95% பேருக்கும் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்ட 21 முதல் 36 நாட்களுக்குப் பிறகு சிறந்த நோய் எதிர்ப்பு திறனை கோவிஷீல்டு உருவாக்கியிருக்கிறது கண்டறியப்பட்டுள்ளது.