9 நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவிய இந்தியா
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயொடெக்கின் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும், தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 300 மில்லியன் குடிமக்களுக்கு வழங்க திட்டமிட்ட நிலையில், அண்டை நாடுகளுக்கு இலவசமாகவும், மானிய உதவியாகவும் வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 6 மில்லியனுக்கும் அதிகமான டோஸை 9 நாடுகளுக்கு மானிய உதவியாக அனுப்பியுள்ளதாக்க ஐ.நா சபைக்கு தெரிவித்துள்ளது. அதாவது, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மியான்மர், சீஷெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் ஏற்கெனெவே இந்தியாவின் 'Neighbourhood First' கொள்கையின்படி மானிய உதவியின் கீழ் கோவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுள்ளன.
அதேபோல் பிரேசில் மற்றும் மொராக்கோவிற்கு தலா 2 மில்லியன் டோஸ்களை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தது.
உலக சுகாதார அமைப்பின் 'Covax Facility' எனும் திட்டத்திற்கும் இந்தியா கொரோனா தடுப்புமருந்துகளை அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.