அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Dec 04, 2022 02:45 AM GMT
Report

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.

அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

covai-selvaraj-announces-resignation-from-aiadmk

கோவை செல்வராஜ் கூறுகையில், திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், இதுபோன்று அரசியலை விட்டு விலகமாட்டேன், ஆனால் துரோகிகளோடு சேர்ந்து ஒருநாளும் பணியாற்றமாட்டேன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரைவிட பதவிதான் முக்கியம் என பன்னீரும், பழனிசாமியும் இருந்தனர் என குற்றசாட்டியுள்ளார்.

எனவே, சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற என் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று கோவை செல்வராஜின் அறிவிப்பை தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிக்கப்படுவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், கோவையில் 4 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.