வீடு புகுந்து பெண் திமுக கவுன்சிலர் மீது கொலை வெறித் தாக்குதல்
கோவை திமுக பெண் கவுன்சிலர் சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்ற்னர்.
பெண் கவுன்சிலர்
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. திமுக-வைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி ஊராட்சி 2வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.இவர் இதே மலுமிச்சம்பட்டி பகுதியில் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து தனது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், நேற்று இரவு சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கொலை வெறி தாக்குதல்
இந்த தாக்குதலில் சித்ரா, அவரின் கணவர் ரவிக்குமார் மற்றும் மகன் மோகன் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள், அவர்களை மீது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, செட்டிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நிலம் வாங்கிய தகராறு ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளன.