ஊரடங்கு எதிரொலி: திருநெல்வேலியில் மூடப்பட்ட குற்றால அருவிகள்
Corona
Lockdown
Tirunelveli
Coutrallam
By mohanelango
தமிழக அரசின் அறிவிப்பின்படி சுற்றுலாத்தலங்களில் பிரசித்தி பெற்ற குற்றால அருவிகள் மூடப்பட்டன.
தமிழக அரசு கொரனோ தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு முதல் ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அதன்படி சுற்றுலாத்தலங்கள் அனைத்திற்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் இன்று முதல் மூடப்பட்டது.

இதனை அடுத்து குற்றாலத்திற்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வணிகர்களும் செல்ல அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil