சவுக்கு சங்கர் வழக்குகளில் நடவடிக்கை கூடாது - தடை விதித்த நீதிமன்றம்!
சவுக்கு சங்கர் மீதான 17 எப்.ஐ.ஆர்.,களில் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர்
பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீது, பெண் போலீசாருக்கு எதிராக அவதுாறாக கருத்து கூறியது, கஞ்சா வைத்திருந்தது என, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்நிலையில், அவர் மீது, மற்றொரு குண்டர் சட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால தடை
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, இவர் மீதான 17 எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கைகளின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
அந்த எப்.ஐ.ஆர்.,கள் தொடர்பான முழு விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.