விவாகரத்து கோரி வழக்கு - நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தனுஷ் - ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் என்ற படம் வெளியாகியிருந்தது.
இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
விவாகரத்து
இந்த விவகாரம் தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இருவர் தரப்பிலும் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதி தள்ளி வைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .