TTF வாசனுக்கு அக்டோபர் 30-ம் தேதி வரை காவல் நீ்ட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு

Kanchipuram Tamil Nadu Police
By Thahir Oct 16, 2023 02:16 PM GMT
Report

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவலை வரும் அக்டோபர் 30-ம் தேதி வரை நீட்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய டிடிஎஃப்

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்ற போது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி துாரத்துக்கு பறந்து சென்று விழுந்தது.

court order ttf vasan custody extends

இந்தச் சம்பவத்தை அடுத்து டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் தனது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

இதனிடையே ஜாமீன் கோரி அவரது தரப்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் அக்டோபர் 3ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று காணொளி காட்சி மூலம் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு அதாவது வரும் அக்டோபர் 16-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.