டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: அண்ணாமலை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
K. Annamalai
By Irumporai
முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை DMK FILES
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK Files' என்ற பெயரில் திமுக பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த நிலையில் தன்னுடைய பெயரை சொத்து பட்டியலில் சேர்த்ததை அடுத்து திமுக பொருளாளர் டிஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அண்ணாமலை வழக்கு
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.