திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு - என்ன பின்னணி?

Thol. Thirumavalavan Tamil nadu Mayiladuthurai
By Swetha Jul 31, 2024 08:00 AM GMT
Report

நீதிமன்றம் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடிவாரண்ட்..

மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. இது தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆஜராகாததால் மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு - என்ன பின்னணி? | Court Issues Arrest Warrant For Thirumavalavan

மயிலாடுதுறையில் கடந்த 2003ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!

தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!

என்ன பின்னணி

இவ்வழக்கு விசாரணையின்போது, திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு - என்ன பின்னணி? | Court Issues Arrest Warrant For Thirumavalavan

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிபதி விஜயகுமாரி, வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.