அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் - எச்சரிக்கை விடுத்த தலைமை நீதிபதி!
உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் பி.டி.ஆர் வழக்கு குறித்து தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆடியோ விவகாரம்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக இருந்தபொழுது இவரது ஆடியோ ஒன்று வெளியானது. அதில் இவர் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 2 ஆண்டுகளில் தங்கள் முன்னோர்களை விட அதிகமாக சம்பாதித்துவிட்டதாக பேசியுள்ளார், மேலும், அது 30 கோடி இருக்கும் என்று கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு இவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த ஆடியோ பொய்யானது என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம்
இந்நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால் இவர் உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார்.
இதனை தொடர்ந்து, பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், "அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்தாதீர்கள்" என்று தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.