செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை முதன்மை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்ட 5 நாட்கள் விசாரணை முடிந்து, தற்போது வரும் 25-ஆம் தேதி வரை அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சில தினங்களில் அமலாக்கத்துறையிடம் சரணடைவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
வழக்கை மாற்றிய நீதிமன்றம்
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைதாகியிருக்கும் செந்தில் பாலாஜியின் வழக்கை எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு சென்னை முதன்மை நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.