ஜாய் கிரிஸில்டா விவகாரம்.., மாதம்பட்டி ரங்கராஜிற்கு டிஎன்ஏ பரிசோதனை

Madhampatty Rangaraj
By Yashini Mar 05, 2026 11:10 AM GMT
Report

2023ஆம் ஆண்டு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி விட்டார் என ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.

தனக்கும், தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பராமரிப்பு தொகை கொடுக்க உத்தரவு விடக்கோரி கடந்த அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்தார்.

மேலும் வீடு வாடகை, வீட்டு செலவிற்காக மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜாய் கிரிஸில்டா விவகாரம்.., மாதம்பட்டி ரங்கராஜிற்கு டிஎன்ஏ பரிசோதனை | Court Allows Madhampatty Rangaraj To Do Dna Test

இந்நிலையில், தன்னை மிரட்டி ஜாய் திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தைக்கு நான் தான் அப்பா என்று டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் எனவும் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி அளிக்குமாறு மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். 

ஜாய் கிரிஸில்டா விவகாரம்.., மாதம்பட்டி ரங்கராஜிற்கு டிஎன்ஏ பரிசோதனை | Court Allows Madhampatty Rangaraj To Do Dna Test

இதனையடுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையுடன் சேர்ந்து செயல்பட இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.