ஈரோட்டில் மின்னல் தாக்கியதில் கணவன்- மனைவி பலி

Erode Thunder
By Yashini May 25, 2026 06:37 AM GMT
Report

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் சுரேஷ் (42) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (39).

இவர்கள் மூப்பன்சாலை பகுதியில் கடந்த 3 மாதங்களாக பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தனர்.

நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது திடீரென சுரேஷ் மற்றும் மஞ்சுளாவை மின்னல் தாக்கியத்தில் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர்.

ஈரோட்டில் மின்னல் தாக்கியதில் கணவன்- மனைவி பலி | Couples Killed By Lightning Tragedy In Erode

கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு பிரியா (18) என்ற மகளும், கதிரேசன் (16) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், மின்னல் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.