சென்னையில் திருமண பரிசாக கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கிய நண்பர்கள்
நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவை அனைத்தும் வரலாறு காணத வகையில், அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 92 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
அதே சமயம் சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.785 ஆக உள்ளது. மேலும் இதேபோன்று சின்ன வெங்காயமும் விலை உயர்ந்து காணப்படுகிறது.
[NWE4JR ]
மதுரவாயலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவை வழங்கிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை மதுரவாயலை சேர்ந்த கார்த்திக் மற்றும் சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரவாயல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு ஆகியவற்றை, விலை ஏற்றத்தை எடுத்துதுகூறும் விதமாக மணக்களுக்கு பரிசாக அளித்தனர்.
இந்த செயல், திருமணத்தில் பங்கேற்றவர்களிடையே பெரும் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.