கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற உறவினர்களுக்கு நிகழ்ந்த விபரீதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன் கட்டிட தொழிலாளியான இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரேகா என்கிற மனைவியும் ஒரு மகன்,ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முனிசந்திரன் கடன் காரணமாக மனைவியை அவரது வீட்டிலிருந்து பணம் வாங்கி தருமாறு கூறி கடந்த ஒருவாரமாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் முனிசந்திரன் மனைவி ரேகாவை தாக்கியுள்ளார். பின்னர் மனைவியை கத்தியால் குத்த விரட்டியபோது ரேகாவின் உறவினர்களான மாதேஷ் , வெங்கடேஷ் ஆகிய இருவரும் முனிசந்திரனை தடுக்க முயன்றதில் இருவரையும் மார்பு, வயிற்று பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
கத்திக்குத்திற்கு ஆளான மாதேஷ்,வெங்கடேஷ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கத்தியால் குத்திய முனிசந்திரனை கைது செய்த கெலமங்கலம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.