ஆசையாக மலை உச்சிக்கு சென்ற காதல் ஜோடி - அடுத்த நொடியே ஏற்பட்ட சோகம்!
காதலி மலையில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலி இறப்பு
துருக்கி நாட்டின் வடமேற்கே போலண்ட் கேப் என்ற பகுதியில் வசித்து வருபவர் நிஜாமுதீன் குர்சு. இவர் ஏசிம் டெமிர் என்ற பெண்ணிடம் தனது காதலை சொல்லியுள்ளார். பின்னர் இவர்களுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வைக் கொண்டாட முடிவு செய்த இருவரும் மலைப் பகுதிக்கு காரில் சென்றுள்ளனர்.

மலை உச்சியை அடைந்த இருவரும் உணவு மற்றும் மதுபானம் குடித்து கொண்டாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று குர்சு காருக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவரின் காதலி அவருடன் வரவில்லை. அப்போது ஒரு பலத்த சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக மலைப் பகுதிக்கு ஓடி வந்துள்ளார் குர்சு.
வந்து பார்த்தபோது அவரின் காதலி டெமிர் 100 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார். படுகாயமடைந்த டெமிர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
காதலன் சோகம்
இதுகுறித்து பேசிய நிஜாமுதீன் குர்சு "காதல் செய்வதற்கான சிறந்த இடம் என நினைத்து மலைப் பகுதிக்கு சென்றோம். காதலை தெரிவித்த பிறகு அது காலத்திற்கும் ஒரு நினைவாக இருக்கவேண்டும் என விரும்பி உச்சிக்கு சென்றோம்.

அதற்கு பின் இருவரும் மதுபானம் அருந்தினோம். திடீரென டெமிர் சமநிலை தவறி விழுந்து விட்டார் என பெரும் வருத்தத்துடன் கூறினார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.