இது யாருடைய குழந்தை? சந்தேகத்தால் அடித்தே கொன்ற தம்பதி - கொடூர சம்பவம்!

Tamil nadu Crime Death Sivagangai
By Swetha May 30, 2024 06:27 AM GMT
Report

பிறப்பில் சந்தேக ஏற்பட்டதல் தம்பதி அவர்களது குழந்தையை கொன்றது அதிர்ச்சி அளித்துள்ளது.

குழந்தை பிறப்பு

சிவகங்கை அருகே நாட்டாகுடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (42). இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே சமயத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மஞ்சு என்பவரை (25) காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இது யாருடைய குழந்தை? சந்தேகத்தால் அடித்தே கொன்ற தம்பதி - கொடூர சம்பவம்! | Couple Kills Baby As A Doubt In Childs Birth

இவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த சூழலில் கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நாட்டக்குடிக்கு சென்றுள்ளனர்.

அப்போது மர்மமான முறையில் குழந்தை இறந்ததாக கூறி அவர்களது குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரசேகரனிடம் விசாரணை நடத்தினர்.

பிறப்பில் சந்தேகம்..தத்து குழந்தையா.? பெற்றோரிடம் சண்டை போட்ட சாய் பல்லவி..

பிறப்பில் சந்தேகம்..தத்து குழந்தையா.? பெற்றோரிடம் சண்டை போட்ட சாய் பல்லவி..

கொன்ற தம்பதி

அதில், சம்பவத்தன்று மனைவி மஞ்சு தனது குழந்தையுடன் சிவகங்கை சென்றதாகவும், மீண்டும் வரவில்லை என்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே பையில் வைத்து விட்டு நாகர்கோவில் சென்று விட்டதாக தெரிவித்தார்.

இது யாருடைய குழந்தை? சந்தேகத்தால் அடித்தே கொன்ற தம்பதி - கொடூர சம்பவம்! | Couple Kills Baby As A Doubt In Childs Birth

இதனையடுத்து, அங்கு சென்று பார்த்த போது குழந்தை சடலமாக இருந்தது. தனது தாயார் காளிமுத்து உடன் சேர்ந்து குழந்தையின் உடலை புதைத்ததாக சந்திரசேகரன் கூறினார். அதனை தோண்டி எடுத்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அப்போது தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை இறந்ததாக தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் குழந்தை பிறப்பில் சந்திரசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரும் , மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கி போட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரசேகர், அவரது மனைவி மஞ்சு , இவர்களுக்கு உடந்தையாக இருந்த தாய் காளிமுத்து ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.