4 வயது மகளை அடித்தேக் கொன்ற தம்பதி - பகீர் சம்பவம்!
வளர்ப்பு மகளை தம்பதி அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ப்பு மகள்
மகாராஷ்டிரா, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் சில்லாட் குடியிருப்பைச் சேர்ந்தவர் பஹீம் ஷேக்(35). இவரது மனைவி பவுசியா ஷேக்(27). இவர்கள் 6 மாதங்களுக்கு முன் ஆயத் என்ற 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதாக இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அடித்து கொன்ற தம்பதி
உடனே, இருவரும் அவசர அவசரமாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதற்கிடையில், குழந்தை நோய் அல்லது உடல்நலக்குறைவால் உயிரிழக்கவில்லை என்றும், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விரைந்த போலீஸார் குழந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் தடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் முடிவில் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை அடித்து துன்புறுத்தியதை பவுசியா ஷேக் ஒத்துக் கொண்டார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.