படுக்கையறையில் சடலமாக கிடந்த கணவன்- மனைவி: நடந்தது என்ன?
மதுரையில் ஏசி-யில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் கணவன்- மனைவி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரை ஆனையூர் எஸ்.வி.பி நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதியில் சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்றிரவு பிள்ளைகள் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில், கணவன்- மனைவி இருவரும் மேல் அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திடீரென நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டதுடன் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி மீது தீப்பற்றி எரிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.