ஆண்களை விட பெண்கள் அதிக சம்பளம் பெறும் ஒரே நாடு - எது தெரியுமா?
உலக அளவில் பெண்கள், ஆண்கள் பெறும் வருமானத்தை விட சுமார் 20 சதவீதம் குறைவாகவே சம்பாதித்து வருகின்றனர்.
வருமானம்
யூரோஸ்டாட் தரவுகள் கூறுவதன்படி, ஆண்களை விட பெண்கள் அதிக ஊதியம் பெறும் ஒரே நாடு லக்சம்பர்க் தான். இது மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

இங்கு பெண்கள் ஆண்களை விட சுமார் 0.7 சதவீதம் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக இந்த நாடு பல வலுவான சட்டங்களையும் தெளிவான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
பெண்கள்தான் டாப்
எந்த நிறுவனம் தகுந்த காரணமின்றி ஆண்–பெண் ஊழியர்களுக்கு வேறு விதமாக சம்பளம் வழங்கினால், அதற்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். இதனால் நிறுவனங்கள் பாலின வேறுபாடின்றி ஒரே வேலைக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பெற்றோர் விடுப்பு மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் தொடர்பான அனைத்து நலன்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமைகளை வழங்கியுள்ளது.
ஆண்களும் குழந்தைகளை கவனிப்பதற்காக விடுப்பு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், பெண்கள் மட்டுமே குடும்பப் பொறுப்புக்காக வேலையை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.