எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - WHOவுக்கு அதிர்ச்சி அளித்த நாடு எது?
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தற்போது வரை 13 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவ்ல் உயிரழந்துள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாம், மூன்றாம் அலை பரவி வருகிறது.
இவை முன்பு வந்த அலைகளைவிடவும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா பாதிப்புகளுடன் மரணங்களும் அதிகரித்து வருகிறது. ஆனால் பல நாடுகள் கொரோனா பாதிப்புகளை முழுமையாக வெளியிடுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதற்கு மத்தியில் ஒரு நாடு உலக சுகாதார நிறுவனத்திடம் தங்களுடைய நாட்டில் யாருக்குமே கொரோனா தொற்று இல்லை என்கிற அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளது. அந்த நாடு வட கொரியா.
கொரோனா தொடர்பான தகவல்களை வட கொரியா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியிருந்த நிலையில் வட கொரியா இந்த விளக்கத்தை அளித்துள்ளது. சர்வாதிகார ஆட்சியின் கீழ் வரும் வட கொரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
எந்தவொரு தகவல்களும் வெளி உலகிற்கு தெரியவராத அளவிற்கு அந்த நாட்டில் கடுமையான அடக்குமுறைகள் நிலவி வருகின்றன.