15 வயதிலேயே கல்யாணம் செஞ்சுக்கலாமாம் - எந்த நாட்டில் தெரியுமா?

Child Abuse Marriage
By Sumathi May 12, 2023 07:34 AM GMT
Report

சில நாடுகள் குழந்தை திருமணத்தை சட்டபூர்வமாக அனுமதித்து வருகிறது.

குழந்தை திருமணம்

உலகில் பெரும்பாலான நாடுகளில் குழந்தை திருமணங்களை ஒடுக்க கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில நாடுகள் குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது.

15 வயதிலேயே கல்யாணம் செஞ்சுக்கலாமாம் - எந்த நாட்டில் தெரியுமா? | Countries That Still Allow Child Marriages

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் 15 வயதில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் 15 வயதுக்கு கீழே திருமணம் செய்யமுடியும். கர்ப்பமாக இருந்தால் இந்த அனுமதியை பெறமுடியுமாம்.

சட்ட பூர்வம்

ஆஸ்திரியா நாட்டில் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ வயது 18 என்றாலும் பெற்றோர் ஓப்புதலுடன் 16-வயதில் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

15 வயதிலேயே கல்யாணம் செஞ்சுக்கலாமாம் - எந்த நாட்டில் தெரியுமா? | Countries That Still Allow Child Marriages

எஸ்டோனியா நாட்டில் 15- வயதிலேயே பெண்களும் ஆண்களும் திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடும்ப சட்டத்தின் கீழ் 18 ஆக உள்ளது.

தான்சானியா நாட்டில் பெண்கள் 12 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு 18 ஆக அனுமதிக்கப்பட்டது.

சூடான் நாட்டில் அந்நாட்டு பெண்கள் 10 வயதிலும், ஆண்கள் 15 வயதிலும் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. 2020ல் 18 ஆக மாற்றியமைக்கப்பட்டது.