சென்னையை விட சின்னதாக இருக்கும் 5 நாடுகள் - அடடே.. இவ்வளவு குட்டியா?
சென்னையை விட அளவில் சிறியதாக இருக்கும் 5 நாடுகளைப் பற்றி பற்றிய தகவல்.
சிறிய நாடுகள்
பரப்பளவில் உலகின் மிகப்பெரிய நாடாக இருப்பது ரஷ்யா. இது சுமார் 17.1 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இந்த பட்டியலில் 3.2 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவுடன் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.
இதில் இந்திய நகரங்களை விட பல நாடுகள் அளவில் சிறியதாக உள்ளன. அந்த சிறிய நாடுகளில் மொத்தமாகவே சில ஆயிரம் மக்கள் தான் வாழ்கின்றனர். இதில் சென்னையை விட அளவில் சிறியதாக இருக்கும் 5 நாடுகளைப் பற்றி பார்ப்போம்.
வாடிகன் நகரம்
வாடிகன் நகரம் உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடாகும். இந்த நாட்டில் மொத்தம் 764 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். இதன் அளவு 0.44 சதுர கிமீ மட்டுமே. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய மதத் தலைவர்களும் இங்குதான் வாழ்கின்றனர். இங்கு தான் போப் ஆட்சி புரிகிறார்.
மொனாக்கோ
மொனாக்கோ உலகின் இரண்டாவது சிறிய நாடாக உள்ளது. இந்த நாட்டில் மொத்தம் 36,157 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். வெறும் 2.02 சதுர கிமீ பரப்பளவில் மொனாக்கோ மத்தியதரைக் கடலுக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும், இந்த நாடு கேசினோக்கள், F1 கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவற்றிற்கு பிரபலமானது ஆகும்.
நவ்ரு
நவ்ரு மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தொலைதூர தீவு நாடாகும். வெறும் 21 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 12,884 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். நவ்ரு அதன் அழகிய வெப்பமண்டல நிலப்பரப்புகள் மற்றும் வளமான கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்ற நாடாகும்.
துவாலு
துவாலு தென் பசிபிக் பகுதியில் உள்ள எல்லிஸ் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். வெறும் 21 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 11,478 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.
இது உலகின் இரண்டாவது குறைந்த மக்கள்தொகை கொண்ட சிறு மாநிலமாக அறியப்படுகிறது. துவாலு கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே புவி வெப்பமடைதலின் விளைவாக கடல் மட்டம் அதிகரித்தால் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
சான் மரினோ
சான் மரினோ உலகின் மிகப் பழமையான குடியரசு ஆகும். இந்த சிறிய நாடு அதன் இடைக்கால கோட்டைகள், வினோதமான கற்கல் வீதிகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. வெறும் 61 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 33,642 மக்கள் வாழ்கின்றனர்.