இந்த நாட்டிலெல்லாம் ஏர் போர்ட்டே கிடையாதாம்; அப்புறம் எப்படி? அதிர்ச்சி தகவல்!
உலகின் சில நாடுகள் விமான நிலையங்களே இல்லாமல் அமைந்துள்ளது.
விமான நிலையங்கள்
உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன் நகரத்தில் விமான நிலையம் கிடையாது. சாலை போக்குவரத்து மட்டும் தான். அதன் நிலப்பரப்பு சிறியது என்பதால் விமான நிலையம் என தெரியவருகிறது.
அதன்பின், மொனாக்கோ. 3 பக்கங்களிலும் பிரான்ஸால் சூழப்பட்டுள்ள இங்கு விமான நிலையம் இல்லை. இங்கு செல்லவேண்டுமென்றால் நைஸ் கோட் டி’அஹூர் விமான நிலையத்தில் தரையிறங்கி வாடகை வண்டி அல்லது படகில் செல்ல வேண்டும்.
லிஸ்ட் இதோ...
சான் மரினோ நிலப்பரப்பில் சிறியதாக இருப்பதால் விமான நிலையம் அமையவில்லை. ஆனால் இதற்கு அருகிலேயே புளோரன்ஸ், போலோக்னா, இத்தாலி, வெனிஸ் மற்றும் பிசா போன்ற பல விமான நிலையங்கள் அமைந்துள்ளன.
அண்டோரோ பெரிய பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மலைகளால் முழுமையாக சூழப்பட்டுள்ளதால் அரசு விமான நிலையம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளது.
லிச்சென்ஸ்டீன் நாட்டில் செங்குத்தான நிலப்பரப்புகள் எதுவும் இல்லையென்றாலும் அங்கு விமான நிலையம் அமைவதெற்கான சூழல் இல்லையென்பதால் போக்குவரத்து அம்சமாக கார், பஸ் உள்ளது.