கள்ளச்சாராயம் : மரக்காணத்தில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

By Irumporai May 16, 2023 04:54 AM GMT
Report

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

  கள்ளச்சாராய விவகாரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் மருந்து இதில் 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

கள்ளச்சாராயம் : மரக்காணத்தில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு | Counterfeit Liquor Death Toll Rises

அத்துடன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் , உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார் 

அதிகரிக்கும் பலி 

இந்த நிலையில் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.