தமிழகம் முழுவதும் நாளை கவுன்சிலர்கள் பதவியேற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்கவுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்கவுள்ளனர்.
அதன்படி, நாளை காலை 9.30 மணி முதல் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு மார்ச்.4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற இருக்கின்றதுமார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .