தொழில் நலத்துறை அமைச்சர் மீது வெடி குண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் - தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி.!
மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகிர் உசேன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்த அபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஜாகிர் உசேன் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதலில் பலத்த காயங்களுடன் அமைச்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் குறித்த காரணங்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.