ஊழல் அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் - இந்தியா எந்த இடம் தெரியுமா?
ஊழல் நாடுகளின் பட்டியலை ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஊழல்
அனைத்து கட்சிகளும் ஊழலை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், நேர்மையான நிர்வாகம் நடத்துவோம் என கூறி தான் ஆட்சி செய்கின்றன. ஆனால் உலகளவில் ஊழல் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
ஓவ்வொரு ஆண்டும், உலக நாடுகளின் ஊழல், லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொள்கிறது.
ஊழல் குறைந்த நாடு
180 நாடுகளுக்கும் 0 முதல்100 வரை மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசை வழங்கப்படுகிறது. குறைந்த மதிப்பெண் உள்ள நாடு ஊழல் மிகுந்த நாடாகவும், அதிக மதிப்பெண் உள்ள நாடு ஊழல் குறைந்த நாடாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம், 2012ஆம் ஆண்டுக்கு பின், 148 நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், 32 நாடுகளில் ஊழல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் 90 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
88 புள்ளிகளுடன் பின்லாந்து 2வது இடத்திலும், 84 புள்ளிகளுடன் சிங்கப்பூர் 3வது இடத்திலும், 83 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4வது இடத்திலும், 81 புள்ளிகளுடன் லக்ஸம்பர்க் 5வது இடத்திலும் உள்ளது.
இந்தியா 96வது இடம்
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 2 புள்ளிகளுடன் தெற்கு சூடான் 180வது இடத்திலும், 9 புள்ளிகளுடன் சோமாலியா 179வது இடத்திலும், 10 புள்ளுகளுடன் வெனிசுலா 178வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் சிரியா 177வது இடத்திலும் உள்ளன.
39 புள்ளிகளுடன் 93வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது, தற்போது 38 புள்ளிகள் பெற்று 96வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. தெற்காசியாவில் பாகிஸ்தான் 135வது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும், வங்கதேசம் 149வது இடத்திலும் உள்ளது. இதே போல், சீனா 76வது இடத்திலும், அமெரிக்கா 28 ஆவது இடத்திலும், இங்கிலாந்து 20 ஆவது இடத்திலும் உள்ளன.