டாஸ்மாக்கில் மதுபான இறக்குமதியில் ஊழல் - வெளியான அதிர வைக்கும் CAG அறிக்கை
டாஸ்மாக் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக CAG தலைமை கணக்காயர்தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்
சட்டபேரவையில் வைக்கப்பட்ட 2021-2022 ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை குறித்து தலைமை கணக்காயர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தலைமை கணக்காயர் ஜெய் சங்கர் செய்தியாளர்களை சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
டாஸ்மாக் மதுபானம் கொள்முதல் செய்ததில் ஒரே நபர்களுக்கு தொடர்ச்சியாக ஏலத்தில் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளதால் ஊழல் நடந்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேறு வேறு பெயர்களில் ஏலத்தில் விண்ணப்பத்தது தெரிய வந்துள்ளது.
அரசுக்கு நஷ்டம்
மேலும் டாஸ்மாக்கில் மது விலை உயர்த்தப்பட்டாலும் அதற்கான வரி அரசுக்கு அளிக்கப்படவில்லை. இந்த வரி அரசுக்கு அளிக்கப்பட்டதால் ரூ 30.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை கொண்டு செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து ஏலதாரர்களிடம் ஏலத்தில் பங்குபெற்ற தேவையான அடிப்படை ஆவணங்கள் எதுவும் இல்லை.
அதே ஆட்களுக்கு ஏலத்தில் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் உள்ள 5359 POS இயந்திரங்களில் 3114 மட்டும் செயல்படுகிறது. அதிக விலைக்கு விற்பதாக வந்த புகாரையடுத்து POS இயந்திரம் மூலம் பணம் வசூலிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போதும் பணம் ரொக்கமாகவே பெறப்படுகிறது.