ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் - முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்..!
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
அதிமுக ஆட்சியின் போது சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் சென்னை தி. நகரில் மேற்கொண்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களை மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தியது குறித்து விசாரிப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணைக் குழுவின் தலைவர் திரு.பி.டபிள்யூ.சி.டேவிதார்,இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்கள் குழுவின் அறிக்கையினை அளித்தார்#CMMKStalin #TNDIPR pic.twitter.com/SG4GPmjiPP
— TN DIPR (@TNDIPRNEWS) August 20, 2022